உடலே கோவில்!

*அகத்தியம்*

*எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.*

*எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.*

*எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?*

“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.

🔘 எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?

🔘 என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?

🔘 எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?

🔘 யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?

🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?

🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

🔘 எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

🔘 என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்?

போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

️ எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?

நதியா நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்தில் “தீவளிக்கு தீவளி…. எண்ண தேச்சி நீ குளி… பாட்டி சொன்ன வைத்தியம்… கேட்டு வந்தேன் பைங்கிளி…” என ஒரு பாடல் வரும்.

நிச்சயமாக அந்த பாட்டி ஒரு மக்கு பாட்டியாகத்தான் இருக்கவேண்டும்.

நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.

ஆனால் ஏதாவது பண்டிகை வந்தால்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒன்றும் சடங்கல்ல. அது ஒரு ஆரோக்கிய செயல்முறை. என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கவேண்டிய தேவையில் சோர்வுறுவது நல்லதா?

️ எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வரும் பலன்கள் :

- உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ).

- உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.

- தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

- தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.

- தோல் மென்மையாகும்.

- தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும்.

- தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.

- தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

- கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்

- கண் பார்வை பாதுகாக்கப்படும்.

- தலைமுடி நன்கு வளரும்.

- உடல் வறட்சி மாறும்

- தலைக்கு பலம் உண்டாகும்

- முழங்கால் மூட்டுகள் பலமடையும்

- குரல் வளம் பாதுகாக்கப்படும்

- உடல் அசதி தீரும்

- தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.

- நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

- நரம்பு மண்டலம் பலப்படும்

- குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

️ என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?

எண்ணெய் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?