கருட வாகன ஸ்ரீ லட்சுமி நாராயணர் பட தரிசனம்...

தினசரி நாகரூப தரிசனத்தினால்

வரும் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய மாற்று பரிகாரமான

கருட வாகன ஸ்ரீ லட்சுமி நாராயணர் பட தரிசன

பலன்கள் :-


இந்த பதிவுடன் சேர்த்து கீழே பதிவிடபட்டுள்ள கருட வாகன ஸ்ரீ லட்சுமி நாராயணர் படத்தை படத்தை பார்ப்பதற்கான காரணம் பற்றிய சூட்சும ரகசிய செய்தியை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.


தொடர்ந்து நாக ரூபத்தை யார் ஒருவர் தினசரி காண்கிறாரோ அவர்களால் வாழ்வில் நிம்மதியையோ, அமைதியான குடும்ப வாழ்வையோ, போராட்டமற்ற தொழிலையோ அல்லது தொழிலில் போராட்டத்தையோ தவிர்க்க முடியாது.


இது அவரவர் அனுபவத்தில் சோதித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தெய்வங்களிடம் கூட நாகத்தை தொடர்ந்து காண்பது அவ்வளவு சிறந்தது இல்லை.


எனக்கு ஆசையே இல்லை. எனக்கு ஞானம் வேண்டும், தனிமை வேண்டும் என்பவருக்கு நாக ரூப தரிசனம் நன்மையை தரும்,மற்றும் முன்னோர் பூஜையை முறையாக செய்து வருபவர்கள் நாகரூபத்தை தினசரி கண்டாலும் நன்மை பெறலாம்.


ஆனால் இன்றைக்கு முன்னோர் பூஜை மறைந்துகொண்டு வரும் வேளையில் நாகரூப தரிசனம் சிறப்பில்லை.


தோஷம் கழிக்கவும், ஆத்ம சக்தி பெறவும், முன்னோர் சாபம் நீங்கவும் நாக ரூப வழிபாடுதான் சிறந்தது.


ஆனால் செல்வம், நிம்மதி,

புகழ் வேண்டும் என்பவர்கள் முன்னோர் திதி சரியாக கொடுப்பவர் மட்டும் நாகதரிசனம் கண்டு

நன்மை பெறலாம்.


அவ்வாறில்லாதவரால் எதிர்மறை பலனையே பெற முடியும்.


இதை நான் சொல்லவில்லை. நம் முன்னோர்கள் அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.


நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். நாங்கள் ஏதோ ஒரு சூழலில் தினசரி நாக ரூபத்தை காண வேண்டியதிருக்கிறது.


அதனால் வரும் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய மாற்று பரிகாரம் எதாவது உள்ளதா என கேட்கத் தோன்றும். நிச்சயம் உண்டு.


அதற்கான வழியை நம் முன்னோர்களே நிறைய சொல்லி சென்றுள்ளார்கள்.


அவை காலப்போக்கில் அழிந்து போய்விட்டன.


இன்றைக்கும் அதை கடைபிடித்தால் வாழ்க்கை வளமாகும்.


அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.


வாழ்வில் துன்பப்பட வேண்டும் என்ற காலகட்டம் உள்ளவருக்கும், முன்னோர் தோஷம், சாபம் உள்ளவருக்கும, கால சர்ப தோஷம் உள்ளவருக்கும் அடிக்கடி பாம்பை நிஜத்திலோ, கனவிலோ பார்க்கும் சூழல் அமையும்.


அவர்கள் செல்லும் ஆலயத்தில்கூட நாக சிற்பமே பெரும்பாலும் அதிகமாக கண்ணில் பதியும்.


நன்றாக கவனியுங்கள்.


தோஷம் பாவம் தரித்திரத்தால் பீடிக்கப்பட்டவர்கள், செல்வ வளம் இல்லாதவர்கள், வாழ்வில் எல்லாவற