🔥✨குருஜியின் இன்றைய அருள்மொழி✨🔥

Updated: Nov 12, 2021🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

நவம்பர் 12, 2021

புண்டரீகர் என்று ஒருத்தர். "அனந்த பத்மநாபனை எங்கே பார்க்கலாம்" என்று கேட்டாராம் அவர். சமுத்திரத்திலே தான் அவர் இருப்பார் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். உடனே புண்டரீகர் சமுத்திரத்துக்குள்ளேயே நடந்து போக ஆரம்பித்தார்!. கழுத்து வரை ஜலம் வந்து விட்டது. மேலே போக முடியாத நிலை.பார்த்தார் புண்டரீகர்... சமுத்திர ஜாலம் முழுவதையும் இறைத்து எடுத்துவிடலாம் என்று இறைக்க ஆரம்பித்தார்! அப்போதும் நாரதர்தான் அங்கு வந்து கை கொடுத்தார்.

"இதை இந்தக் காரியத்தை உடனே நிறுத்து, இப்படி ஜலத்தை இறைத்து அவனைப் பார்க்க முடியாது, என்னுடன் வா" என்று திருக்கடன்மலை (மகாபலிபுரம்) என்கிற ஷேத்திரத்துக்கு புண்டரீகரை அழைத்துப் போனார் நாரதர்.

அங்கே பார்த்த பெருமாளின் கோலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார் புண்டரீகர். வரக்கூடியவர்களை, "வாருங்கள், வாருங்கள்" என்று வரவேற்கும் தோற்றம், அங்கே எம்பெருமானுக்கு. அதைக் கண்டு மகிழ்ந்து ஆயிரம் தாமரைப் புஷ்பங்களாலே அர்ச்சனை பண்ணினார் புண்டரீகர்.

கோணலான மார்க்கத்திலே போனவரை மாற்றி, குறுக்கு வழியிலே பகவானிடத்திலே கொண்டு சேர்த்து விட்டார் நாரதர். ஆகையால், ஆசார்ய சம்பந்தம் மட்டும் இருந்து விட்டால் எப்பேர்ப்பட்டவரும் உயர்கதி அடையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது.ஆசார்யவான் புருஷோ வேத - ஒரு நாளும் தனித்து இராதே. ஆசார்ய சம்பந்தத்தோடுதான் நீ இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆகாசத்தில் பிரகாசிக்கிறானே சூரியன்...அவன் கிரணங்கள் பட்டதுமே தாமரை புஷ்பமானது விகசிக்கிறது. எப்படி விகசிக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

ஒரு பெரிய தாடகத்திலே தீர்த்தம் நிறைய இருந்தால், சூர்ய ரச்மி பட்டவுடனேயே தாமரை விகசிக்கிறது. ஆனால், தாடகத்திலே தீர்த்தமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்; சூர்ய ரச்மி வந்து பட்டால்...? அந்தத் தாமரையானது வாடி வதந்கித்தான் போகுமே ஒழிய விகசித்து மலராது!

அப்போ, தாமரை மலர்வதற்கு முக்கியமான பொருள் தீர்த்தம். தீர்த்தத்திலே இருக்கிற தாமரையை மலரச் செய்பவன் சூர்யன். அதுபோல ஆசார்ய சம்பந்த்தத்தைப் பெற்ற ஜீவனை பரமாத்மா அனுகிரஹித்து விகசிக்கச் செய்வான். தாமர - ஜீவன். தீர்த்தம் - ஆசார்யன். சூர்யன் - பரமாத்மா. தீர்த்த சம்பந்தம் போலே, எப்போதும் ஆசார்ய சம்பந்த்தம் வேண்டும். மோஷம் பெறுவதற்கு இந்த சம்பந்தம் கட்டாயம் வேண்டும்.🕉️🔥🙏


நவம்பர் 11, 2021

_*ஒரு சாமியார்,*_

_*ஒரு நாள் ஒரு ஊருக்குச் சென்றபோது*_

_*“இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது உண்டா? என்று கேட்டபோது, சுப்ரமணியன் என்பவரது வீட்டை காட்டினார்கள்.*_


_*''அதோ அந்த மாடி வீட்டுதான். நல்லவர், சாது, பக்தர். லக்ஷாதிபதி. நான்கு பிள்ளைகள்''*_


_*அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியன் உடனே எழுந்தார். ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர்த்தி,*_


_*”ஐயா, இங்கு உணவு அருந்தவேண்டும் '' என வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் யோகிக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணினார். பேச்சு கொடுத்தார்.*_


_*“உங்களிடம் எவ்வளவு செல்வம் உண்டு?”*_


_*“சுவாமி! ரூபாய் 22,000/- உண்டு”*_


*குழந்தைகள் எத்தனை பேர்?”