பித்ரு தோஷம்...

"பித்ரு தோஷம், பித்ரு கர்மா "சார்ந்த சந்தேகங்கள் பெரும்பாலானோருக்கு இருக்கின்றன. ஜாதகப்படி யாருக்கு எல்லாம் பித்ரு தோஷம் இருக்கும் நம்முடைய ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி போக்க வேண்டும் என்பதையும் முன்னோர்களுக்கு எப்படி திதி கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்தப் பதிவில் நாம் மிக மிக தெளிவாக பார்க்கலாம். ✡️பித்ருக்களுக்கு திதி கொடுப்பது மிக முக்கியமானதா? ஆம் மிகவும் முக்கியமானது. ✡️திதி கொடுப்பது மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது எல்லாம் நம்முடைய பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு பழக்க வழக்கங்கள் ஆகும். ✡️ தற்போது உள்ள நவீன காலத்தில் பெரும்பாலானோர் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதையும் பித்ரு காரியங்கள் செய்வதையும் தவிர்க்கின்றனர். பெரும்பாலானோர் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மூன்று வருடத்திற்கு ஒரு முறை இவ்வாறாக பித்ரு காரியங்கள் செய்கின்றனர். அது முற்றிலும் தவறு. ✡️பித்ருக்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்காமல் இருந்தால் எந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படும் என்றால் அதாவது நம்முடைய முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்களையும்,நிறைய அனுபவங்களையும்,நிறைய ஆசைகளும், நிறைய கற்பனைகளும், நிறைய விருப்பங்களும் சிந்தனைகளும் அவர்கள் மனதில் இருந்திருக்கும். ✡️இந்த விஷயங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவிக்காமலே இறந்து போயிருப்பார்கள்.அவர்கள் ஆசைப்பட்ட இஷ்டப்பட்ட அவர்கள் மனதில் இருந்த தீராத ஆசைகள் நிறைவேறாமலேயே அவர்களின் ஆத்மா அவர்களை விட்டு போய் இருக்கும். 
இதுபோன்ற நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போனவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஆத்மா அவர்களை விட்டுப் போனாலும் அவர்களுடைய எண்ணங்கள் மட்டும் என்றுமே நம்மை விட்டுப் போகவே போகாது நம்மைச் சுற்றியே எப்போதும் அவர்களின் எண்ணங்கள் இருந்து கொண்டிருக்கும்.

 

✡️இது போன்ற தீராத ஆசையுடன் இறந்து போனவர்களின் எண்ணங்களில் கெட்ட எண்ணங்களும்,தவறான சிந்தனைகளும் இருக்கலாம்.இது போன்ற எண்ணங்கள் அனைத்தும் நம் பரம்பரையும் நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் நாம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம். ✡️ஒரு சில குடும்பத்திலும் ஒரு சில பரம்பரையிலும் நாம் சிலவற்றை பார்க்கலாம் அதாவது அந்த குடும்பமும் அந்த பரம்பரையும் நல்ல ஒழுக்கமான குடும்பமாகவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கொண்ட குடும்பமாகவும் இருக்கும். ✡️ஆனால் அந்தக் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் ஆனால் அந்தக் அந்தக் குழந்தை பிடிவாதக்காரனாகவும்,வீட்டிற்கு அடங்காதவன் ஆகவும் தவறான சிந்தனைகளும் தவறான புத்திகளும் திருட்டுத்தனபுத்தியும் கொண்டிருக்கும் குழந்தையாக இருக்கும் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் அந்த குழந்தையை பார்த்து நம் பரம்பரையில் யாருக்குமே இந்த புத்தி இருந்ததில்லை உனக்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்பார்கள். ✡️அதற்குக் காரணம் அந்தக் குழந்தை கிடையாது அவர்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த மாதிரி தவறான எண்ணங்களும் தவறான புத்தியும் தவறான ஆசையும் இருந்திருக்கும் அவர்களின் நிறைவேறாத அந்த ஆசை இச்சை அனைத்தும் இந்தக் குழந்தையின் மூலமாக அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.என்று அர்த்தம். ✡️இது போன்ற விஷயங்கள் நம் குடும்பத்தையும் நம் பரம்பரையையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்களுக்கு திதியே கொடுக்கிறோம். ✡️ஜாதகப்படி யாருக்கெல்லாம் பித்ரு தோசம் இருக்கும். ✡️"பூசம், விசாகம், சதயம்"இந்த 3 நட்சத்திரத்தில் யார் யாரெல்லாம் பிறந்து இருக்கிறார்களோ அவர்கள் பிறப்பதற்கு முன்னால் இவர்கள் பரம்பரையில் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுப்பது என்பது விட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம். ✡️ராசி நட்சத்திரம் மற்றும் லக்னம் விழுந்த நட்சத்திரம் மற்றும் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திர புள்ளி "பூசம், விசாகம், சதயம்" இந்த நட்சத்திரத்தில் ஒரு ஜாதகருக்கு விழுந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக பித்ருக்கள் சாபம் இருக்கின்றது என்று அர்த்தம். ✡️உதாரணமாக கடக லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னம் விழுந்த டிகிரி "பூசம்" நட்சத்திரமாக இருந்தாலும் சரி.இல்லையென்றால் கும்ப லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னம் விழுந்த டிகிரி "சதயம்" நட்சத்திரமாக இருந்தாலும்.மற்றும் துலாம் லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னம் விழுந்த டிகிரி "விசாகம்" நட்சத்திரத்தில் விழுந்து இருந்தாலும் சரி இப்படி இருந்தால் அந்த ஜாதகர் பிறப்பதற்கு முன்னால் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுப்பது விட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம். ✡️இல்லையென்றால் கன்னி லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி புதன் சென்று "பூசம்" நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி,மீன லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி குரு சென்று "விசாகம்" நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி.மற்றும் மகர லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் லக்னாதிபதி சனி பகவான் சென்று "சதயம்" நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி இந்த ஜாதகருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்று அர்த்தம் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்க வில்லை என்பதும் அர்த்தமாகும். ✡️இல்லையென்றால் ராசி நட்சத்திரம் "பூசம், விசாகம், சதயம்"இந்த நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி இவர்களுக்கு பித்ததோஷம் இருக்கின்றது என்று அர்த்தம். ✡️கிரகங்களில் எந்த கிரகம் பித்ரு தோஷம் பற்றிய சாபத்தை வெளிப்படுத்தும் என்றால் குரு பகவான் தான் அது சம்பந்தப்பட்ட பிரச்சினையை நமது ஜாதகத்தில் காட்டும். ✡️யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் குரு இருந்தாலும் சரி 5ம் பாவத்தில் குரு இருந்தாலும் சரி 7ஆம் பாவத்தில் குரு இருந்தாலும் சரி 9ம் பாவத்தில் குரு இருந்தாலும் சரி இவர்கள் பிறப்பதற்கு முன்னால் இவர்கள் பரம்பரையில் முன்னோர்களுக்கும் ஒழுங்காக திதி கொடுக்க வில்லை என்று அர்த்தம். ✡️லக்கினம் மற்றும் லக்கினாதிபதி குரு பகவான் பார்வை மூலம் பார்த்தாலும் சரி இல்லை என்றால் லக்னாதிபதி உடன் குரு சேர்ந்து இருந்தாலும் சரி இவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். ✡️பித்ருக்களுக்கு அதாவது முன்னோர்களுக்கு எப்படி திதி கொடுக்க வேண்டும்.

 
வெறும் தாத்தா பாட்டி தாய் தந்தை இவர்களுக்கு திதி கொடுத்தால் மட்டும் பித்ரு தோஷம் நம்மை விட்டு போகாது.தந்தை உடன் பிறந்தவர்கள் மற்றும் தாத்தா உடன்பிறந்தவர்கள் தந்தையுடைய பரம்பரை தாத்தாவுடைய பரம்பரை இந்தப் பரம்பரையில் யாரெல்லாம் அற்ப ஆயுளில் இறந்து இருக்கிறார்களோ மற்றும் அகால மரணத்தில் யாராவது இருக்கிறார்களோ மற்றும் பிறந்த உடனே ஒரு குழந்தை இறந்து இருக்கிறாதோ அவர்களுக்குத்தான் நாம் மிக முக்கியமாக திதி கொடுக்க வேண்டும்.அப்போதுதான் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைந்து நமக்கு பித்ரு தோஷம் நம்மை விட்டு விலகும்.


 

✡️நான் வெறும் என்னுடைய தாய் தந்தை மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு மட்டும்தான் திதி கொடுப்பேன் என்று சொன்னால் பித்ரு தோஷம் ஒரு காலமும் நம்மை விட்டு போகாது. ✡️அற்ப ஆயுளில் இறந்தவர்கள் மற்றும் அகால மரணம் மற்றும் துர்மரணத்தில் இறந்தவர்கள் மற்றும் பிறந்த உ