விரதமும் பலன்களும்!

Updated: Nov 20, 2021விரதங்களும் அவற்றின் பலனும்


நமது உடல் உறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் இருக்கும். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய


செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட் டன. முக்கிய விரதங்களையும், அதனால் ஏற்படும் பலன்களையும் இந்த பகுதியில் காணலாம்.


சோமவார விரதம்

நாள்: கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்


தெய்வம்: சிவபெருமான்


விரதமுற : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.


பலன்: திருமணம் ஆகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணம் ஆனவர்களுக்கு தகுந்த வாழ்க்கை.


சிறப்பு தகவல்: கணவன்-மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.


கந்தசஷ்டி விரதம்

நாள்: ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்.


தெய்வம்: சுப்பிரமணியர்.


விரதமுறை: முதல் 5 நாட்கள் ஒருபொழுதும் சாப்பாடு, கடைசி நாள் முழுமையாக பட்டினி இருந்து சூரசம்ஹாரம் முடிந்த பிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல் வேண்டும்.


பலன்: குழந்தைப்பேறு.


மங்களவார விரதம்

நாள்: தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல்.


தெய்வம்: பைரவர், வீரபத்திரர்.


விரதமுறை: பகலில் ஒருபொழுது சாப்பிடலாம்.


பலன்: பயணத்தின் போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்.


உமா மகேஸ்வர விரதம்

நாள்: காத்திகை மாத பவுர்ணமி.


தெய்வம்: பார்வதி, பரமசிவன்.


விரதமுறை: காலையில் மட்டும் சாப்பிடக் கூடாது.


பலன்: குடும்ப ஒற்றுமை ஏற்படும்.