Chathru Samhaara Homa!

மாபெரும் அதி சக்தி வாய்ந்த சத்ரு சம்கார ஹோமம் ப்ரமரிஷி மலையில்....


*சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை*.....


"சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால்,

அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.


இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும். உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

மிக பழைய புராதன முருக பெருமானுக்கு உரித்தான *குமார தந்திரம் என்ற தந்திர நூலில்* மூல மந்திர திரிசதியில் *116-வது நாமாவளியில் அஷ்ட லட்ச ஜபப்ரீதாயை ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதாய நம* என்று வருகிறது. அடுத்ததாக *வரும் *117-ம் நாமாவளியில் ஓம் அஷ்டவசட்ச ஜபப்ரகாசிதாய ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதாய நம:* என்று வருகிறது.

அதாவது *எட்டு லட்சம் மூல மந்திர ஜபம் , ஹோமம் , தர்ப்பணம் போன்ற விதிமுறைகளை முறையாக கடைபிடித்து சத்ரு சம்கார ஹோமத்தை உரிய விதி முறைகளுடன் செய்பவர்களுக்கு முருக பெருமான் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதனாஅவனுக்கு இருக்கின்ற அனைத்து சத்ரு உபாதைகளையும் நீக்கி வேண்டும் வரங்களை அருள்வார் என்பது இந்த நாமாவளியின்பொருள்.* அஷ்டாவர்த்தி தர்ப்பணம் என்ற விதிப்படி ஸ்ரீ சத்ரு சம்கார ஹோமத்தை செய்பவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் மங்களங்கள் உண்டாகும் என்பது குமார தந்திரம் என்னும் நூலில் அகத்தியரால் சொல்லப்பட்ட சத்தியவாக்கு..




*இந்த வேள்வியில் அதி சிறப்பாக நம் வேத கால ரிஷிகளினால் உருவாக்கப்பட்ட முருக பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் , காயத்ரி மந்திரங்கள் , மாலா மந்திரங்கள் , விசேட மந்திரங்கள் , ரகசிய மந்திரங்கள் மூலமாக அக்கினியிலே வேத நூல்களில் சொல்லப்பட்டதட்கு இணங்க அனைத்து திரவியங்களும் கொண்டு எட்டு லட்ச மூல மந்த்ர ஜெபத்துடன் நடைபெறுவது வேத முறை ஆகும்.


இந்த மகா வேள்வியில் கலந்து கொள்வது கோடியில் ஒருவருக்கே கிடைக்கும் வரப்பிரசாதம்


இந்த ஸ்ரீ சத்ரு சம்கார ஹோமத்தில் மூல மந்திரங்களை கூறிக்கொண்டே 108 தடவைகள் அல்லது 54 முறை, *ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் சரவண பவாய ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதாய ஸ்வாஹா!!!* என்று ஹோமம் செய்தால் முருக பெருமானே அங்கு ப்ரத்யக்ஷமாவார் என குமார தந்திரம் கூறுகிறது.


இந்த சத்ரு சம்கார மூல மந்திர திரிசதி மாலா மந்திரத்தின் ஆழமான அர்த்தம் பின்வருமாறு *54 வரங்களை* முருக பெருமானிடம் பின்வருமாறு கேட்டு அமையும். யாகம் நடைபெறும் போது பின்வருமாறு பிராத்தனை செய்தால் உடனடியாக முழு பலனும் வரமாக அமையும்.


*1. எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*2. நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*3. சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*4. எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*5. துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*6. என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*7. பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*8. என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*9. எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*10. உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*11. என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*12. எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*13. எனக்கு சத்ரு உபாதைகள் தொந்தரவுகள் அகலட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*14. கெட்ட சம்பவங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*15. கெட்ட கனவுகள்வராமலேயே நசிந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*16. தரித்திரம் என்ற சொல்லுக்கு இடமின்றி போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*17. தீய சக்திகள் நெருங்காமல் விலகியே இருக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*18. என்னைக் கடும் விஷம் பாதிக்கப்படாமல் இருக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*19. எல்லா வகையிலும் லாப நிலைகள் வந்து அடையட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*20. நெருங்குகிற போதே நோய்கள் நசிந்து குலையட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*21. தீய நினைவுகள் என்னிடம் வராமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*22. சம்பத்துக்கள் மலைபோல வளரட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*23. மனம் போல விருப்பங்கள் நிறைவேறட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*


*24. நான் வசிக்கும் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.......*