லலிதா சகஸ்ர நாமாவும் பலன்களும்!

Updated: Oct 20, 2021

லலிதா சகஸ்ர நாமாவும் பலன்களும்!


ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல் லாம் தீரும். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்வதாகும்.


ஆரோக்கியம், பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலிய உபாதைகளிலிருந்து விடுதலை, விஷ தோஷங்களிலிருந்து நிவாரணம், திருமணம், அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கை, தன, தான்ய, ராஜ்ய வசியம் போன்ற பலப்பல காரியங்கள் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணத்தால்’’ கைகூடி வருவது அனுபவ பூர்வமான உண்மையாகும்.

காலை நித்ய கர்மாக்களைச் செய்து முடித்த பிறகு ஸ்ரீசக்ர பூஜையும் மூல மந்திர நாம ஜபங்களும் பின் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணமும்’’ செய்தால் விசேஷ பலன்களைப் பெறலாம். இதை எந்நாளும் காலை, மாலை பாராயணம், ஜபம் செய்யலாம்.


தக்க குரு மூலம் உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும். குரு கிடைக்காவிட்டால் ‘ஸ்ரீதட்சிணாமூர்த்தியை’ குருவென பாவித்து பிழையின்றி பாராயணம் செய்ய வேண்டுமென்பது சான்றோர் கருத்து.


இதன் ஒவ்வொரு நாமாக்களும் அதிசயமான அரிய பல அனுகூல பலன்களை தர வல்ல தாரக மந்திரங்களாகும். எனினும் முழுமையாக ‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’ செய்ய முடியாதவர்கள் அவரவருக்கு உகந்த நாமாவைத் தேர்ந்தெடுத்து குறைந்தது 108 முறையாவது தினசரி பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.


அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.


பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார்.


சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது.

சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன.


லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.


லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.


“துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே”என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.


லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும் .


சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்

அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்

பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.


தேவியின் ஆயிரம் நாமங்கள் ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும்.

செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால்

அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும்.


பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.


கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி

பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க