முத்திரைகள்!

Updated: Dec 8, 2021
இதயத்துடிப்பை சீராக்கும் ''மாதங்கி முத்திரை''


செய்முறை:-


இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு, நடுவிரல்கள் மட்டும் சேர்ந்த்திருக்குமாறு வைத்துக் கொண்டால், அது தான் மாதங்கி முத்திரை. இந்த முத்திரையை நாபிப் பகுதிக்கு நேராக வைத்துக் கொள்ளவேண்டும். ( அதாவது 'சோலார் ப்ளக்ஸஸ்' க்கு நேராக).


மாதங்கி முத்திரையை வைத்துக் கொள்ளும்போது மூச்சை நிதானமாக விடவேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது வயிறு சற்றே வெளிப்புறமாக வரவேண்டும். மூச்சை வெளிவிடும்போது வயிறு உட்பக்கமாகச் சுருங்கவேண்டும். அந்த சமயத்தில் நம் கவனம் முழுவதும் வயிற்றுப் பகுதியில் இருக்கவேண்டும்.


பலன்கள்:-


மாதங்கி முத்திரை மூளையின் ஒரு பகுதியான ''ஹைபோதலாமஸ்''என்ற பகுதியை நன்கு பாதுகாக்கிறது. ஹைபோதலாமஸ் என்ற பகுதி, நமது உடலில் தன்னால் இயங்கும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. (AUTONOMOUS NERVOUS SYSTEM).


இந்த முத்திரையானது உள்ளுறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.


மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்ள இறுக்கம் வலி போன்றவற்றை நீக்குகிறது.


இதயம், வயிறு, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகம், போன்ற அனைத்து முக்கிய உறுப்புகளும் மாதங்கி முத்திரையால் பயன் பெறுகின்றன.


வழக்கத்துக்கு அதிகமாகத் துடிக்கும் இதயம், மாதங்கி முத்திரையால் அமைதி அடைகிறது.


உடலின் உட்பகுதிகளில் எங்காவது வலி ஏற்பட்டால் மாதங்கி முத்திரையை 15 நிமிடம் வைத்துக் கொள்ளவேண்டும். மன அமைதி பெற 5 நிமிடங்கள் என ஒரு நாளைக்கு 3 முறை இந்த முத்திரையை வைத்துக் கொள்ளவேண்டும்.
👌முதுகு வலியை நீக்கும் ''வாதமேரு முத்திரை''👌


👌செய்முறை:-


வலது கையில் கட்டை விரலின் நுனி, நடு விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளைத் தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். அதே சமயம், இடது கையில் ஆட்காட்டி விரலின் நகத்தின் மேல் கட்டை விரலின் முதல் கோடு பொருந்தியிருக்கவேண்டும்.


👌பலன்கள்:-


தோட்ட வேலை, வீட்டு வேலை ஆகியவற்றை வெகு நேரம் செய்தல், இருசக்கர வாகனங்களை நீண்ட நேரம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் முதுகுவலியையும், களைப்பையும் நீக்குகிறது.


சரியான முறையில் உட்காராமல் தவறான முறையில் உட்கார்வதால் ஏற்படும் வலியயைப் போக்குகிறது.


தண்டுவடத்தின் வழியே செல்லும் நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் முதுகுவலியைச் சரி செய்கிறது.


பயம், போதிய தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான உணவு, போதிய உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படும். இந்தவகை முதுகுவலிக்கும் இந்த முத்திரை சிறந்த தீர்வு தரும்.