நவதுர்க்கைகள் யார்?

நவராத்திரி சிறப்பு பதிவு....


நவதுர்க்கை....


துர்க்கையின் 9 அவதார வடிவங்கள் என்னென்ன, நவதுர்க்கை வடிவத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதையும், நவராத்திரி விழாவில் எப்படி வணங்கப்படுகின்றது என்பதையும் பார்ப்போம்...

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.

வட இந்தியாவில் நவராத்திரி தினங்களில் நவதுர்க்கைகளில் ஒவ்வொரு வரை ஒவ்வொரு நாளும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.


நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள் :

1.சைலபுத்ரி

2.பிரம்மசாரிணி

3.சந்திர காண்டா

4.கூஷ்மாண்டா

5.ஸ்கந்த மாதா

6.காத்யாயனி

7.காளராத்திரி

8.மகாகௌரி

9.சித்திதாத்ரி


1.சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.


இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.

ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.


2.பிரம்மசாரிணி

நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக பிரம்மசாரிணி தேவியை வணங்கப்படுகிறது.


‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.ம். இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை.


சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்பது புராணக் கதை.

அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத் தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர்.


பிரம்மசாரிணி மந்திரம் :

“ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம் தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன”


பிரம்மசாரிணி துர்க்கைக்கு கன்னியாகுமரியில் கோயில் உள்ளது.


3. சந்திரகாண்டா

நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘காண்டா’ என்றால் மணி என்று பொருள்.

சந்திர மணி அணிந்த சந்திர காண்டா, பத்து கைகளை கொண்டு காட்சி தருகின்றார். இவர் சிங்க வாகனத்துடன் அருளுகின்றார்.

சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார்.


சந்திரகாண்டா தியான மந்திரம் ;

“ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா, பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா ”


இவளின் கோவில்கள் : உத்தர பிரதேசம், வாரணாசியில் உள்ள சித்ரகந்த குல்லி கோயில்


4. கூஷ்மாண்டா: