நவராத்திரிக்கு ஒன்பது நாள் ஏன்? 


நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. "நவம்' என்ற சொல்லுக்கு "ஒன்பது' என்றும், "புதியது' என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும்.


இதனால் தான் முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஒருநாளில், பகல் பொழுது சிவபிரானின் அம்சமாகும். இரவுப்பொழுது அம்பாளின் அம்சமாகும். எனவே தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு காலமாகும்.


பகலில் உயிர்த்தெழுந்து நடமாடும் உயிர்களை சிவன் (ஜீவன்) இயக்குகிறார். இரவில் தூங்கியதும் நமக்கு என்ன ஆனதென்றே தெரிவதில்லை.ஒருதற்காலிக மரணத்தை அனுபவித்து விட்டு விடியற்காலையில் விழிப்புத்தட்டும் போது எழுகிறோம்.


அதுவரை நம் இதயத்தை இயங்கச் செய்து, அமைதியாக தாலாட்டிப் பாதுகாப்பவள் அம்பிகை. எனவே, பகலை விட இரவுக்கு முக்கியத்துவம் அதிகம். எனவே தான் சிவனுக்கு ஒரு ராத்திரியும், அம்பாளுக்கு ஒன்பது ராத்திரியும் பூஜைநாட்களாக ஒதுக்கப் பட்டன.


நவராத்திரியின் ஒன்பது சக்தி எவை தெரியுமா?


நவராத்திரி என்ற வார்த்தையிலேயே நவ என்ற ஒன்பது இலக்கைக் கொண்டு வருகிறது. ஒன்பது நாளும் எதைக் கொண்டாடுகிறோம் பிறப்பின் பெருமையை, படைப்பின் பெருமையை! மரம், செடி முதல் ஊர்வன, பறப்பன முதற்கொண்டு விலங்குகள், மனிதர்கள், மகான்கள், அவதாரங்கள், மும்மூர்த்தி, முத்தேவிகள் என படைப்பின் அத்தனை அம்சங்களையும் கொண்டாடுகிறோம்.


அத்தனையுமாய் விரிந்து அன்னையானவள் சக்தி தேவியாய் கொலுவிருக்கிறாள் என்பதை! இதை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள்.


பொதுவாக நவராத்திரி என்றால் கொலு வைப்பது, நைவேத்யம் செய்வது, சுற்றி உள்ள சுற்றத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைப்பது (யதா சக்தி) பின் எது இயலுமோ அதைத் தாம்பூலமாக தருவது போன்றவை மட்டுமே நமக்குத் தெரியும்.


இவைகளால் என்ன நன்மை, எதற்குச் செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. நம் முன்னோர்கள் எல்லோரும் செய்வதால் நாமும் அதைச் செய்கிறோம். அப்படியே கடைபிடிக்கிறோம்.


பித்ரு பக்ஷத்தில் மனபாரத்தை (சுய மற்றும் வம்சாவழி பாபத்தை) ஆத்ம வழிபாடு மூலம் பாரத்தை இறக்கிவிட்டு உடல், மனம் சுத்தியாகி பின் அம்பிகை வழிபாட்டின் மூலம் உடலுக்குச் சக்தி சேர்க்கவே ஒன்பது நாள் வழிபாடாக அமைக்கப்பட்டது.


ஒன்பது சக்திகள் :

1. பர்வத ராஜ புத்ரி - அம்பிகையின் பிறப்பு (குண்டலினி செயல்பட ஆரம்பிக்கிறது)2. பிரம்மசாரிணி - சிவனை மணக்க அம்பிகை மேற்கொண்ட தவம் (சுவாதிஷ்டானம்) (இங்கு துவைதம் அத்வைதமாக மாறும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர-சக்தியாக தவம் இருப்பது.)


3. சந்திரகண்டா - மணிபூரக சக்ராதான் செயல்புரியும். மனம் புனிதத்தன்மை அடையும்.


4. கூஷ்மாண்டா - அனாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்யும். தைரியம் மேலிடும். நோய் நொடிகளிலிருந்து தேகம் காக்கப்படும்.


5. ஸ்கந்த மாதா - விசுக்தி சக்கரத்தை தியானிக்கச் செய்யும். தெய்வத்தை, தெய்வ நிலையை அடைய மார்க்கம் கிட்டும். ஒரு வித அமைதி பிறக்கும்.


6. காத்யாயணி - ஆக்ஞா சக்கிரத்தை எண்ணி தவம் செய்ய வேண்டும். இறைவனை உணர, அடைய மேற்கொள்ளும் தியான முறை.


7. காலராத்ரி - சகஸ்ரார சக்ரத்தினை மனதில் இருத்