விதியை மாற்றும் சாதனா பாதை!

Updated: Feb 3நீங்கள் செய்யக் கூடிய பரிகார சாதனாவின் முழு பலனைப் பெறுவது எப்படி?

🔥பிரச்சனை குறித்து கவலையான எண்ணங்களை அறவே நீக்க வேண்டும்.


🔥குருஜி இடம் பெற்ற கிரியா தீக்ஷை மற்றும் மந்திர தீக்ஷை மீது முழு ஈடுபாடு, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்.


ஏதேனும் சாதனா குறித்த சந்தேகம் இருப்பின் வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பினால் தெளிவு படுத்தி தரப்படும். நீங்களாகவே சாதனவின் போது ஏற்படும் நல்ல அனுபவங்கள், தடைகள் குறித்து அனுமானங்கள் ஏதும் செய்யாமல் கேட்டு தெளிவு பெற்று சாதனாவை தொடர்ந்து பக்தி சிரத்தையுடன் செய்யும்போது மட்டுமே மாற்றங்கள் நிகழும்.

செயல்முறை வரிசை:

📿 குல தெய்வம்/இஷ்ட தெய்வம் முன் அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.


📿 நமக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் இடது பக்கமாக வைக்க வேண்டும்.


📿குல தெய்வ வழிபாடு(21முறை போற்றி)


✨குருவுக்கு நன்றி சொல்லி பின்வரும் செயல்முறையை துவங்க வேண்டும்.📿தீக்ஷை மந்திர உச்சாடனம்

📿ருத்ர காளி கிரியா


செயல்முறை முடித்ததும், டம்ளரில் வைத்த நீரை எடுத்து குடித்து விட வேண்டும்.


🕉️ஜெப மாலை பயன்படுத்தக் கூடாது.


🕉️தீக்ஷை மந்திரம்/ கிரியா செயல்முறை மனதில் சொன்னால் போதுமானது. வாய்விட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


🕉️ஒரு பாய்(ஆசனத்தின்) மீது கிழக்கு நோக்கி அமர்ந்து தான் செயல்முறையை செய்ய வேண்டும்.


தர்பை பாய் மேல் அமர்ந்து செய்வது அதீத பலன்களை கொடுக்கும்.


🕉️சூரிய வழிபாடு செய்து சாதானாவை முடித்தல் அவசியம் :


சூரிய வழிபாடு கற்றுக்கொள்ளுங்கள்
📿மந்திர தீக்ஷை பெற்றதையோ, பெறப்பட்ட மந்திரத்தையும் யாரிடமும்(குடும்ப உறுப்பினர்கள் உட்பட) சொல்லக் கூடாது. சொன்னால் பெற்ற தீக்ஷை, மந்திரம் பலிக்காது.🕉️குளித்து விட்டு 4-5 மணி அளவில் செய்யும்போது, பிரபஞ்ச/இறை சக்தியின் ஆற்றல் நல்ல முறையில் நமக்கு கிடைப்பதால் பலன்கள் விரைவாக கிடைக்கும்.


 
அகத்திய ரிஷி "மந்திரங்களை ஜெபிக்கும் ம