ஆரோக்கியம் பிரதானம்!

Updated: Nov 19, 2021

ஆரோக்கியமாக வாழ 52 வழிகள்! அவசியம் பின்பற்றுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்!


1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.



2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.



3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.



4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.



5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.



6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.



7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.



8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.



9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.


11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.


12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.


13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.<