சூரியனை ஏன் வணங்க வேண்டும்?

Updated: Jan 9சூரியநமஸ்காரம் செய்வது ஏன்?மந்திரங்களைச் சொல்லி சூரியநமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.

ஓம் மித்ராய நமஹ – சிறந்த நண்பன்.

ஓம் ரவயே நமஹ – போற்றுதலுக்குரியன.

ஓம் சூர்யாய நமஹ – ஊக்கம் அளிப்பவன்.

ஓம் பானவே நமஹ – அழகூட்டுபவன்.

ஓம் ககாய நமஹ – உணர்வுகளுக்கு வலிமை தருபவன்.

ஓம் பூஷ்ணே நமஹ – புத்துணர்ச்சி தருபவன்.

ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ – ஆற்றல் அளிப்பவன்.

ஓம் மரீசயே நமஹ – நோய்களை அழிப்பவன்.

ஓம் ஆதித்தாய நமஹ – கவர்ந்திழுப்பவன்.

ஓம் சவித்ரே நமஹ – சிருஷ்டிப்பவன்.

ஓம் அர்க்காய நமஹ – வணக்கத்திற்கு உரியவர்.

ஓம் பாஸ்கராய நமஹ – ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.


மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரியநமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல நன்மைகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மையாகும்.

சூரியனைப் போற்றுவோம். உடல் ஆரோக்கியத்தையும், அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம்.

காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். வகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சூரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் நற்கதி அடைய முடியும்.


சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.தினந்தோறும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விட்டு முன்னோர்களையும் சூரிய பகவானையும் வணங்க/சூரிய நமஸ்காரம் யோக பயிற்சி செய்து வர தீராத நோய்கள் தீரும், அபரிமித சக்தி உடலுக்கு கிடைக்கும்.கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.


சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும்

புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.


ஓம் சூர்ய தேவாய நம:சூரிய வழிபாடு செயல்முறை நீங்களும் எளிதில் செய்து அளவற்ற பலன்களை பெற முடியும். கீழ்கண்ட யூடியூப் லிங்க்- ஐ கிளிக் செய்து கற்றுக் கொள்ளுங்கள்.