உணவே மருந்து ✨🙏

Updated: Nov 13, 2021

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்


பல வருடங்களுக்கு முன்பு என் ஆச்சி (அம்மாவின் அம்மா) கைத்தறி நெசவு தொழில் செய்து வந்தார்கள்(விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவு முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது). அப்போது அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் காலை 10 மணிக்கு தேநீர், காபி, எண்ணெய்யில் பொறித்த பலகாரங்களுக்கு பதிலாக இந்த சூடான சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் கொடுப்பார்களாம். அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். வீட்டில் இருக்கும் போது அம்மாவும் எங்களுக்கு இது தான் தந்தார்கள்.


**செய்முறை:**


சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் துருவிய தேங்காய், ஒரு பிடி சாதம், சிறிது கல் உப்பு சேர்த்து கருப்பட்டி துண்டுடன் அனைவருக்கும் கொடுப்பார்களாம்.


**பயன்கள் :**

* காய்ச்சல், வாந்தி மற்றும் நீரிழப்பு(Dehydration) ஆகியவை வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த நேரத்தில், உடல் நிறைய தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்க முனைகிறது, இது அரிசி தண்ணீரை (கஞ்சி) உட்கொள்வதன் மூலம் மீட்டெடுக்க முடியும். கார்போஹைட்ரேட்டின் வளமான ஆதாரமாக இருப்பதால், இந்த ஆரோக்கியமான பானம் நம் ஆற்றல்(Energy Level) அளவை நாள் முழுவதும் வைத்திருக்கும்.

* இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும்.

* உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்.

* நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும்.


முதல் படத்தில் இருப்பது மாப்பிள்ளை சம்பா சாதம் வடித்த கஞ்சி தண்ணீர். இரண்டாவது படத்தில் இருப்பது மதிய உணவு


மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம்


காய்கறி சாம்பார்


முட்டைகோஸ் தோரன்


**குறிப்பு: **சாதம் வடித்த தண்ணீர் நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.அதனால் மருத்துவரிடம் கேட்டு விட்டு பருகுவது நல்லது.


நன்றி.


#சிறுதானியத்தினை_இழந்தோம்_பெருநோய்களுக்கு_ஆளானோம்..!!!

சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகளைக் கீழே பார்க்கலாம்.

1) ஊட்டச்சத்து நிறைந்தது:

உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

2) கரோனரி தமனி கோளாறுகளைத் தடுக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுக